தேசிய செய்திகள்

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: குழந்தைகளுக்கு எச்சரிக்கை..!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

கோழிக்கோடு,

கேரளா மாநிலத்தின் சில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எந்த மாவட்டத்திலும் தக்காளிகாய்ச்சல் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றும், இந்த நோய் குறைவான ஆபத்து கெண்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை