தேசிய செய்திகள்

திரிபுரா சட்டசபை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 45.86% வாக்குகள் பதிவு

திரிபுரா சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 45.86% வாக்குகள் பதிவாகி உள்ளது. #Assemblypoll

அகர்தலா,

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. இதற்காக பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் வந்து வாக்கு சாவடிகளில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்காக 3,214 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 45.86% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி திரிபுரா மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் பேச்சை மக்கள் கேட்பார்கள் என்று நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம்.

இவ்வாறு அம்மாநில பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்