தேசிய செய்திகள்

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி

எல்லாப்புரா அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மங்களூரு;

உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்புரா தாலுகா ஹிட்டினாபா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரி எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் லாரிகளின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் லாரியின் இடுபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எல்லாப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிவேகமாக லாரியை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது தெரியவந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் மராட்டியத்தை சேர்ந்த பரமேஷ்வர் (வயது 25) என்பதும், படுகாயம் அடைந்தவர்கள் மாரட்டியத்தை சேர்ந்த ராஜு பாபுராவ் (24), மத்திய பிரதேசம் மாநிலம் பட்டேல்வாடா பகுதியை சேர்ந்த ஜஸ்பால் சிங் (59), திலீப் மாருதி யவன் (24) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு