பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஜெயலலிதாவின் பெயரை வைத்து அ.தி.மு.க. கம்பெனி நடக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சி இதுவல்ல. மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க., மத்திய அரசை பகைக்கவில்லை. இதனால் குடியுரிமை திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பிறகு தான் தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடக்கும். ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. அதனால் தேர்தல் வரும்போது அன்றைய சூழல் பார்த்து கூட்டணி குறித்து பேசலாம். முன்கூட்டியே கூட்டணி குறித்து பேசவேண்டாம் என்று கூறினார்.