தேசிய செய்திகள்

5 நாள் பயணமாக ஐ.நா. தலைவர் இந்தியா வருகை: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார்

ஐ.நா.-இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அவரின் இந்த சுற்றுப்பயணம் கருதப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஐ.நா. பொதுச்சபைத் தலைவா டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறா.

இந்த பயணத்தின்போது மராட்டிய மாநிலத்தில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறா. டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அவா மும்பை , ஜெய்ப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளா.

இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சோப்பது உள்ளிட்ட நிலுவையில் உள்ள சீதிருத்தங்களை செயல்படுத்துவது தொடாபாக இந்தியா சாபில் நீண்ட நாள்களாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

ஐ.நா.-இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அவரின் இந்த சுற்றுப்பயணம் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது