தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், கிராமங்களை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஜலந்தர்,

பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் சந்த் ரவிதாஸின் 649-வது ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், குரு ரவிதாஸின் 649-வது பிறந்தநாள் ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நன்னாளில், உங்களுடன் நானும் இருப்பதில் அதிர்ஷ்டம் பெற்றுள்ளேன்.

இந்த தினத்தில் சக நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். சந்த் ரவிதாஸின் ஆசியுடன், நாம் நிச்சயம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாடாளுமன்றத்தில் நாட்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட் ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும், விவசாயிகள், இளைஞர் சக்தி, மகளிர் சக்தியையும் அதிகரிக்க செய்யும். இந்த மத்திய பட்ஜெட் கிராமங்களை வலிமைப்படுத்தும். விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க கூடிய பட்ஜெட் இதுவாகும். ஆத்மநிர்பார் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவற்றை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். அவர் பேசும்போது, அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

இதில், மத்திய அரசின் அமைச்சகங்களிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திற்குதான் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், மத்திய பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல்: விலை கூடவும் குறையவும் வாய்ப்புள்ள பொருட்கள் எவை எவை?

ஆபரேசன் சிந்தூருக்கு பின்... மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமில்லை: காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு

ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்

மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான வரி குறைப்பு இல்லை: நகை பிரியர்களுக்கு ஏமாற்றம்