தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலும் 2 நீதிபதிகள் நியமனம் -மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு

2 நீதிபதிகளும் பதவியேற்றதும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகளைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட முழு பலத்துடன் செயல்படும்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று தலைமை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர் என கூறி உள்ளது. இந்த 2 நீதிபதிகளும் பதவியேற்றதும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகளைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட முழு பலத்துடன் செயல்படும்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்