கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கான சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி..!!

ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கான சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனினும் அந்த கொடிய வைரசை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஜென்னோவா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'ஜெம்கோவாக்-ஓஎம்' என்ற பூஸ்டர் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில் 'ஜெம்கோவாக்-ஓஎம்' பூஸ்டர் தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்காக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது