புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவிவருகிறது. இதன்காரணமாக பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா அரசியல் தலைவர்களையும் விட்டுவைப்பதில்லை. பிரதமர் அலுவலகத்துறை மந்திரியாக உள்ள ஜிதேந்திரசிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு இன்று (நேற்று) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே என்னுடன் தொடர்புடைய அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மத்திய மந்திரி ஜிதேந்திரசிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.