தேசிய செய்திகள்

கார் விபத்தில் காயமடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கார் விபத்தில் காயமடைந்த மத்திய மந்திரி ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பனாஜி,

மத்திய மந்திரிசபையில் ராணுவ இணை மந்திரியாகவும், தனிப்பொறுப்புடன் ஆயுஷ் துறை மந்திரியாகவும் ஸ்ரீபாத யசோதா நாயக் பதவி வகித்து வருகிறார்.

கோவா மாநிலத்தை சேர்ந்த அவர், கடந்த திங்ககிழமை கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில், ஸ்ரீபாதநாயக் படுகாயம் அடைந்தார். அவருடைய மனைவியும், உதவியாளரும் விபத்தில் பலியானார்கள்.

மத்திய மந்திரி ஸ்ரீபாதநாயக், கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள கோவா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய மந்திரி ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு