தேசிய செய்திகள்

உ.பி: ஹோட்டல் சமையலறையில் கேஸ் லைன் வெடித்து விபத்து- 10 பேர் படுகாயம்

சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.

லக்னோ,

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. எம்போரியோ கிராண்ட் ஹோட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சமையலறையில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த ஊழியர்களை மீட்டனர்.

இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி), ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, " நேற்று மாலை ஹோட்டலின் சமையலறை எரிவாயு லைனில் கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீஸ் குழு, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக லோக் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்