தேசிய செய்திகள்

டெல்லியில் 52 வயது அமெரிக்க பெண்ணிடம் தகாத முறையில் நடந்த 25 வயது வெளிநாட்டுவாழ் இந்தியர் கைது

டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டலில் 52 வயது அமெரிக்க பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்ட 25 வயது வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.#US #NewDelhi

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள லுட்யென்ஸ் நகரில் அமைந்த 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு கடந்த ஜனவரி 6ந்தேதி அமெரிக்க நாட்டை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அங்கு அவர் அன்மோல் சிங் கர்பண்டா (வயது 25) என்ற வாலிபருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். அதன்பின் ஜனவரி 8ந்தேதி இருவரும் ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ளனர். அதில் வாலிபர் மயக்க மருந்தினை கலந்து கொடுத்துள்ளார். தகாத முறையிலும் தன்னிடம் நடக்க முயற்சித்துள்ளார் என அந்த பெண் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின் ஓட்டலில் இருந்து வெளியேறிய அந்த பெண் குர்காவன் நகருக்கு சென்றுள்ளார். அவர் ஜனவரி 10ந்தேதி போலீசாரை அணுகி புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியான வெளிநாட்டுவாழ் இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

#US #NewDelhi

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்