தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார்.

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தடைந்தார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதுபற்றி டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்ட மோடி, இந்திய-அமெரிக்க ராணுவ உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள ஜோ பைடனின் எண்ணத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் ஆண்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தான் நிலவரம், குவாட் அமைப்பை வலுப்படுத்துதல், கொரோனா நிலவரம் ஆகியவை குறித்து பேசப்பட்டது.

பின்னர், நிருபர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன், தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த இந்தியாவுக்கு ரூ.187 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு