தேசிய செய்திகள்

ஊழல்,வேலைவாய்ப்பு இன்மைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்: வருண் காந்தி

ஊழல்,வேலைவாய்ப்பு இன்மைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

பிலிபட்,

பாஜக எம்.பியான வருண் காந்தி சமீப காலமாக மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அந்த வகையில், மீண்டும் மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சிக்கும் வகையில் வருண் காந்தி கூறியிருப்பதாவது; வேலை வாய்ப்பு இன்மை, பணவீக்கம் , ஊழல் ஆகியவற்றிற்கு எதிரான எனது போராட்டம் தொடரும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மரியாதையும் உதவிக்காக யார் முன்பும் தலைகுனிய வேண்டிய கட்டாயம் இல்லாத இந்தியாவை நோக்கி நான் பாடுபட்டு வருகிறேன்.

வேலை வாய்ப்பின்மை இந்த நாட்டை விட்டு அகலும் வரை எனது போராட்டம் நீடிக்கும். ஊழலுக்கு எதிராகவும் நான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பேன். நமது முன்னோர்களின் போராட்டம் வீணாகிப்போவதை நான் அனுமதிக்க மாட்டேன். அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அநீதி, ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பும் காலம் வரும்" என்றும் வருண் காந்தி குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்