தேசிய செய்திகள்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: மத்திய மந்திரியிடம் தமிழக எம்.பி. வலியுறுத்தல்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மத்திய மந்திரியிடம் தமிழக எம்.பி. வலியுறுத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் டெல்லியில் ரெயில்வேத்துறை மந்திரி பியூஷ்கோயலை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான பறக்கும் ரெயில் திட்டம் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து கிடப்பில் கிடக்கிறது. இதற்கு காரணமான வழக்கும் வெகுஜன விரைவு போக்குவரத்து அமைப்புக்கு ஆதரவாக முடிந்துள்ளது. எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் அந்த திட்டத்தை நிறைவேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது