தேசிய செய்திகள்

விஜயவாடா வெள்ள பாதிப்பு: ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ1 கோடி நன்கொடை

மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் நிதியினை அளித்துள்ளார்.

விஜயவாடா,

ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு முன்பு திடீர் கனமழை கொட்டியது. தொடர்ந்து மழையால், பெய்த முக்கிய சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதில் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. பல்வேறு இடங்களில் பஸ் நிலையங்களுக்குள் மழை நீர் புகுந்ததால், பஸ் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நூற்றூக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தனர். குறிப்பாக, விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவுக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு அம்மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ.1 கோடி நிவாரணம் அளித்துள்ளார். மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் நிதியினை அளித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்