தேசிய செய்திகள்

டெல்லியில் வன்முறை: தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடக்கம் - பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

டெல்லியில் வன்முறை தொடர்பாக, தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடங்கி உள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல், டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட தேசத்துரோகிகளை மேலே அனுப்பும் பணி தொடங்கி விட்டது எனக்கூறியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் சிலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தேசத்துரோகிகளை சிறைக்கு அனுப்பி பிரியாணி வழங்கும் காலம் முடிந்துவிட்டது.

அவர்களை நேரடியாக மேலே அனுப்பும் பணி நேற்று முதலே (நேற்று முன்தினம்) தொடங்கிவிட்டது. சம்பவ இடத்திலேயே முடிவு எடுத்துவிட வேண்டும். நாட்டில் இத்தகைய புரட்சி நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் இந்துக்களை பாதுகாக்க முடியாது என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்