விவசாய சங்க தலைவர் நரேஷ் டிகாய்த் 
தேசிய செய்திகள்

விவசாயிகளின் சுய கவுரவத்தையும் பாதுகாப்போம்:‘பிரதமரின் கண்ணியத்தை மதிப்போம்’; விவசாய சங்க தலைவர் பேட்டி

பிரதமரின் கண்ணியத்தை மதிப்போம், அதே நேரம் விவசாயிகளின் சுய கவுரவத்தையும் பாதுகாப்போம் என்று போராடும் விவசாய சங்க தலைவர் நரேஷ் டிகாய்த் கூறினார்.

பிரதமர் மோடி கருத்து

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி நேற்று முன்தினம் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை டெல்லியில் காணொலி காட்சி வழியாக நடத்தியது.

அதில் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டு காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக அரசு எடுத்து நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது, பேச்சு வார்த்தைக்கு ஒரு தொலைபேசி அழைப்புதான் செய்ய வேண்டும் என்று கூறினார்.

விவசாய சங்க தலைவர் பேட்டி

இதையொட்டி போராடும் விவசாய சங்கம் ஒன்றின் தலைவரான நரேஷ் டிகாய்த், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் பிரதமரின் கண்ணியத்தை மதிப்போம். அதே நேரத்தில், அரசோ, நாடாளுமன்றமோ எங்களுக்கு தலைவணங்குவதை விவசாயிகள் விரும்பவில்லை. விவசாயிகளின் சுய கவுரவம் மதிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியதிருக்கிறது.

ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறை ஒரு சதியின் பகுதி ஆகும். நமது மூவர்ணக்கொடி எல்லாவற்றுக்கும் மேலானது. உயர்வானது. அதை யாரும் அவமதிக்க நாங்கள் விட மாட்டோம். இதை சகித்துக்கொள்ள முடியாது.

மரியாதையான தீர்வு வேண்டும்

சிறையில் உள்ள எங்கள் விவசாயிகளை விடுவிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டும். மரியாதையான தீர்வை ஏற்படுத்த வேண்டும். நிர்ப்பந்தத்தின்கீழ் நாங்கள் எதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு