புதுடெல்லி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கான அறிவிப்பை விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ளன.
இது குறித்து பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கேட் கூறியதாவது;-
விவசாயிகளின் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இல்லை. ஜூலை 22 ஆம் தேதி டெல்லிக்குச் சென்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவோம் . தினமும் 200 பேர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறினார்.