தேசிய செய்திகள்

“புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை மறக்க மாட்டோம்” - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சீங்

புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை நாம் ஒருநாளும் மறக்க மாட்டொம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சீங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவனும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகள் முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் இன்று புல்வாமா தாக்குதலின் 2-ம் அண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர்த்தியாகத்தை பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை ஒருநாளும் மறக்க மாட்டோம். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்