புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டோக்லாம் அருகே பூடான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், 100 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அங்கு 4 கிராமங்களையும் உருவாக்கி வருகிறது. இது இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
கடந்த மே மாதத்துக்கு பிறகு இது நடந்துள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? அப்படியானால் தேசத்தை யார் பாதுகாப்பது? இவ்வாறு அவர் கூறியுள்ளார். சீனா அமைத்த கிராமங்களை காட்டும் செயற்கை கோள் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.