புதுடெல்லி,
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்த முறை 5 மாநிலங்களிலும் குறைந்த கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதுடன், வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி விடப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி உள்ளன.
அதிலும் குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் முதல் மற்றும் 2-வது கட்ட வாக்குப்பதிவுக்கு இடையே அதிக இடைவெளி வைக்கப்பட்டிருப்பது குறித்து சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
.இது குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதாவது:-வாக்காளர்களுக்கு வசதியாக இருக்கும் விதத்தில் தேர்தல் கட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 5 மாநிலங்களிலும் குறைந்த கட்டங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
மேலும், ஏதேனும் வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, அல் லது வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் சில வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வசதியாகவும், அனைத்து வாக்குகளையும் ஒரே நேரத்தில் எண்ணுவதற்கும் கடைசி வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 5 நாட்கள் இடைவெளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.