தேசிய செய்திகள்

உறவினர்களால் தொல்லை மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு கணவர் தற்கொலை

ஒரு சொத்து பிரச்சினை தொடர்பாக உறவினர்கள், அக்குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அக்கம்பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.

தினத்தந்தி

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலம் பஸ்சிம் பர்தாமன் மாவட்டம் குறிலியடங்காவில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பிணமாக கிடந்தனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த 40 வயதான கணவர், தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மனைவியும், 10 வயதான மகன், 2 வயதான மகள் ஆகியோர் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

ஒரு சொத்து பிரச்சினை தொடர்பாக உறவினர்கள், அக்குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அக்கம்பக்கத்து வீட்டார் தெரிவித்தனர். அவர்கள், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

மனைவியையும், 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது