புதுடெல்லி,
புதிய எம்பிக்கள் பதவி ஏற்றபோது, முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக புதிய சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், உறுப்பினர்களின் முழக்கங்கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என கூறினார்.
மேலும், மத ரீதியான கருத்துகளை சொல்ல மக்களவையில் அனுமதி இல்லை என்று கூறியதுடன், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புடன், மக்களவை மரபுகளை காப்பேன் என்றும் கூறினார். வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற முழக்கங்களை கூறக்கூடாது என யார் சொன்னது என்றும் கேள்வி எழுப்பினார்.