தேசிய செய்திகள்

காநாடகத்தில் மழை பாதிப்பு, நிவாரணம் வழங்குவது குறித்து கலெக்டர்களுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை

கர்நாடகத்தில் மழை பாதிப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகள் 15 நாட்கள் விடுமுறை எடுக்க கூடாது என்று பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் மழை பாதிப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகள் 15 நாட்கள் விடுமுறை எடுக்க கூடாது என்று பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பசவராஜ் பொம்மை ஆலோசனை

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதையடுத்து பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது மழை பாதித்த பகுதிகள் குறித்தும், நிவாரண வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசித்தார். அப்போது மழையால் பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு, பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

15 நாட்கள் விடுமுறை இல்லை

மாவட்ட பொறுப்பு செயலாளாகள், மாவட்ட கலெக்டர்கள், உதவி கமிஷனர்கள், வேளாண்துறை அதிகாரிகள் அடுத்த 3 நாட்கள் கண்டிப்பாக மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்திவிட்டு, அதற்கான அறிக்கையை உடனடியாக அரசுக்கு அளிக்க வேண்டும். மழையால் வீடுகள் முழுமையாக இடிந்திருந்தால், என்.டி.ஆர்.எப். வழிகாட்டுதலின்படி முழு நிவாரணத்தை வழங்க வேண்டும்.

மாநிலத்தில் இன்னும் சில மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், அடுத்த 15 நாட்கள் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் விடுமுறை எடுக்க அனுமதி இல்லை. அதிகாரிகள் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும்.

ரூ.728 கோடி இருப்பு

கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் ரூ.728 கோடி இருப்பு உள்ளது. அந்த பணத்தை நிவாரண பணிகளுக்கு எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். பயிர்கள் சேதம், கால்நடைகள் உயிர் இழப்பு, தோட்டக்கலைத்துறையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவை குறித்து அறிக்கை தயார் செய்து அரசுக் உடனடியாக மாவட்ட கலெக்டர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், தலைமை செயலாளர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு