தேசிய செய்திகள்

5 மாத குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்

வீட்டின் ஒரு அறையில் 5 மாத குழந்தை இறந்து கிடப்பதை கண்ட உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தோப்பிரம்குடியைச் சேர்ந்தவர் தீனு (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. தீனு நேற்று இரவு தனது 5 மாத குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தீனுவின் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது உறவினர் வெகு நேரம் ஆகியும் வீட்டில் எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை என்பதால் கதவை தட்டியுள்ளார். வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில் உள்ள சென்ற அவர் தீனு தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மற்றோரு அறையில் தீனுவின் குழந்தை இறந்து கிடப்பதையும் கண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தீனு மற்றும் அவரது 5 மாத குழந்தையின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக அவரது உறவினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 4 மாதங்களுக்கு முன்பு தீனுவின் கணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அதிலிருந்து தீனு மன உளைச்சலில் இருந்ததாக உறவினர் போலீசாரிடம் தெரிவித்தார். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு