தேசிய செய்திகள்

கேரளா: பஞ்சாயத்து உறுப்பினர் விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீஜா பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொட்டாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 48). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஆரியநாடு பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஸ்ரீஜா நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஸ்ரீஜா கிராமத்தினரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பண மோசடியில் ஈடுபட்டதாக போஸ்டரால் ஸ்ரீஜா மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயல்பட்டாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்ரீஜாவின் தற்கொலை குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது