தேசிய செய்திகள்

இந்திய பெண் கிரிக்கெட் வீரர்கள் அனைவரின் மனதையும் வென்று விட்டனர்- பிரதமர் மோடி

இந்தியப் பெண் கிரிக்கெட் வீரர்கள் 1.2 பில்லியன் இந்தியரின் மனதை வென்றுவிட்டனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி

உலகக் கோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் தோல்வி அடைந்தாலும் இந்த வீரர்கள் இந்தியர் அனைவரது மனதையும் வென்றுவிட்டதாக தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

மகளிர் பல விதமான துறைகளில், குறிப்பாக கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் தொடர்ந்து உச்சங்களை தொடுகின்றனர் என்றார் மோடி தங்களது அறிவார்ந்த செயல்பாட்டால் இந்தியப் பெண் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கின்றனர் என்றார் மோடி. மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்தியா பெண் கிரிக்கெட் வீரர்களை எப்படி ஆதரித்தது என்பது மாறுதலை சுட்டுவதாக இருக்கிறது. அணியின் சாதனைகள் மீது இந்தியா பெருமிதம் கொண்டதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் மோடி.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்