செய்திகள்

உத்தர பிரதேசத்தில் ரவுடிகளுடன் நடந்த மோதலில் டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்தில் டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கான்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ரவுடிகள் சுட்டதில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், சில போலீசார் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரவுடிகள் தாக்குதலில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டது கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்விடத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு