செய்திகள்

மர்ம நபர் உள்ளே நுழைய முயன்றதால் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

மர்ம நபர் உள்ளே நுழைய முயன்றதால் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நேற்று முன்தினம் ஒருவர் நுழைந்தார். எம்.பி. என்று கூறிக்கொண்டு அவர் அங்குள்ள நூலகத்துக்குள் நுழைய முயன்றார். ஆனால், வரவேற்பறையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

முழுமையான பரிசோதனைக்கு பிறகு அவர் கூறியது பொய் என்று தெரிய வந்தது. அவர் பெயர் வருண் மாத்தூர் ஆகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்திலும், அதைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு