செய்திகள்

திருத்தணி அருகே ரெயில் மோதி பெண் சாவு

திருத்தணியில் உள்ள பஜார் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது.

திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள தும்பிகுளத்தை சேர்ந்தவர் திருபுரசுந்தரி (வயது40). பூ கட்டும் தொழிலாளி. திருபுரசுந்தரி நேற்று திருத்தணிக்கு வந்து தன் வேலைகளை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவர் திருத்தணியில் உள்ள பஜார் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது.

இதில் திருபுரசுந்தரி அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருபுரசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT