செய்திகள்

கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி,

புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். மதியம் நடை அடைக்கும் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை மற்றும் இரவிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு கோவிலின் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, பாலமுருகன் சன்னதி ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புத்தாண்ட முன்னிட்டு குற்றாலத்திலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்துவிட்டு குற்றாலநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு முழுவதும் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாவூர்சத்திரம் காமராஜ்நகரில் உள்ள வென்னிமலை முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. அதேபோல் அங்குள்ள நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் தமிழர் தெருவில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் நரசிம்மர் கோவில், 2-ம் தெருவில் உள்ள விநாயகர் கோவிலிலும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும்தேவியர் ஆலயத்தில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு முப்பெரும்தேவியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் காசு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பூஜை ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதேபோல் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவில், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவில், குபேர ஆஞ்சநேயர் கோவில், நாதகிரி மலை மீது அமர்ந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

சேரன்மாதேவியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள வைத்தியநாத சுவாமி, ஒப்பிலா நாயகி அம்பாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல் சேரன்மாதேவி தூய மிக்கேல் அதிதூதர் தேவாலயம், தூய இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்