எச்.டீ.எப்.சி. லைப் இன்சூரன்ஸ் நிறுவனப் பங்குகளை விற்றுவிடலாம் என சிட்டிகுருப் குளோபல் மார்கெட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.350ஆக நிர்ணயித்து இருக்கிறது. சென்ற வார இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 1.19 சதவீத உயர்வாகும்.
* வோல்டாஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.640-ல் இருந்து) ரூ.675-ஆக உயர்த்தி உள்ளது. மும்பை சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.602.85-ல் நிலைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.01 சதவீத சரிவாகும்.
* பயோகான் நிறுவனப் பங்கை விற்றுவிடலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.470-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.592.90-ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 4.34 சதவீதம் குறைவாகும்.
* ராலிஸ் இந்தியா நிறுவனப் பங்குகளில் முதலீட்டை குறைத்து கொள்ளலாம் என பிரபுதாஸ் லீலாதர் நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.242-ல் இருந்து) ரூ.172-ஆக குறைத்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.148.25-ஆக இருந்தது. கடந்த வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.72 சதவீதம் குறைவாகும்.
* டாட்டா ஸ்டீல் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என எம்கே குளோபல் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. மேலும் இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.683-ல் இருந்து) ரூ.715-ஆக உயர்த்தி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கு 2.10 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.556.45-க்கு விலைபோனது.
நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.