செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஆம்புலன்சுக்காக ஒதுங்கி வழிவிட்ட ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்கள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்புக்கு சென்ற கார் ஆம்புலன்ஸ் ஒன்றிற்காக ஒதுங்கி வழிவிட்டது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தனது சொந்த மாநிலம் ஆன மேற்கு வங்காளத்திற்கு இன்று 2 நாள் சுற்று பயணம் மேற்கொண்டார்.

அவர் கனிடிகி என்ற பகுதியில் பள்ளி திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்துள்ளார். அவரது காருக்கு பாதுகாப்பிற்காக 20 கார்கள் உடன் சென்றது.

இந்நிலையில், அவரது பாதுகாப்பிற்காக சென்ற இறுதி காரின் பின்னால் ஒலி எழுப்பியபடி ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனடியாக, அதற்கு வழி விடும் வகையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு கார்கள் ஒதுங்கி வழிவிட்டன.

எனினும், ஆம்புலன்சின் உள்ளே இருந்தது யார் என உடனடியாக தெரிய வரவில்லை.

ஜனாதிபதியாக மேற்கு வங்காளத்திற்கு பிரணாப் முகர்ஜி மேற்கொள்ளும் கடைசி பயணம் இதுவாகும்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்