செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை - வைகோ குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடே கொந்தளிக்கும் நிலையில் ஜனநாயகத்தின் இதய பீடமான நாடாளுமன்றத்தில் அதுபற்றி விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை. 2 அவைகளிலும் விவாதம் நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி அறிக்கை மட்டும் தந்தார்.

ஜனநாயகத்தில் நாட்டு மக்களுக்கு மத்தியில் உள்ள கொந்தளிப்பு குறித்து பேச வேண்டும். ஏராளமான மக்கள் வீடு, வாசல்களை இழந்து உயிருக்கும் ஆபத்து வருமோ? என்று பரிதவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்