ஆட்டோமொபைல்

மூன்றாம் தலைமுறை ஹயபுசா அறிமுகம்

சுஸுகி நிறுவனம் ஹயபுசா மாடல் மோட்டார் சைக்கிளில் மூன்றாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இவை கண்கவர் இரட்டை வண்ணங்களில் கிடைக்கும். கிரே, கேண்டி சிவப்பு, மேட் கருப்பு, விகோர் நீலம், முத்து வெள்ளை ஆகிய நிறங்களில் வந்துள்ளது. இதில் நவீன மோட்டார் சைக்கிளில் ஓ.பி.டி. வசதி உள்ளது. வாகனத்தில் பழுது ஏற்பட்டதை தானாக கண்டறிந்து அதை உணர்த்தும் வசதியே ஓ.பி.டி. எனப்படுகிறது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.90 லட்சம்.

இது 4 ஸ்டிரோக் லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. இதில் 6 கியர்கள் உள்ளன. இது 1,340 சி.சி. திறன் கொண்டது. 19 பி.எஸ். திறனை 9,700 ஆர்.பி.எம், சுழற்சியில் வெளிப்படுத்தும். 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படும். இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி மற்றும் ஏ.பி.எஸ். வசதி கொண்டது. டிராக்ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், குயிக் ஷிப்டர், குரூயிஸ் கண்ட்ரோல், பியூயல் இன்ஜெக்ஷன் போன்ற வசதிகள் இருப்பதால் எரிபொருள் சிக்கனமானது. எலெக்ட்ரானிக் இக்னிஷன் வசதியும் கொண்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்