சிறப்புக் கட்டுரைகள்

பியல் கிரில்சுடன், அஜய்தேவ்கன்

வனத்தின் அழகையும், அதில் இருக்கும் ஆபத்துகளையும், அங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு ஒளிபரப்பும் நிகழ்ச்சியாக ‘தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்ற நிகழ்ச்சி இருந்து வந்தது.

தினத்தந்தி

அதன் அடுத்த கட்டமாக, உலகத்தில் உள்ள பிரபலங்களை, வனத்திற்குள் அழைத்துச் சென்று, அவர்களோடு சாகசங்களைச் செய்யும் சர்வைவல் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலுமே டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல ஹாலிவுட் திரை பிரபலங்களும், பியல் கிரில்சுடன் காட்டுப் பகுதியில் பயணித்து, அந்த அனுபவங்களை தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனும் இணைந்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு முழுவதும் மாலத் தீவு பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது