சிறப்புக் கட்டுரைகள்

ரூபாய் மதிப்பு அடிப்படையில் முந்திரி ஏற்றுமதி 34% குறைந்தது

நவம்பர் மாதத்தில், ரூபாய் மதிப்பு அடிப்படையில் முந்திரி ஏற்றுமதி 34 சதவீதம் குறைந்து இருக்கிறது.

முந்திரி நுகர்வு

இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், லக்னோ போன்ற நகரங்களில் முந்திரி அதிகமாக நுகரப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் முந்திரி நுகர்வு அதிகம் இல்லை. எனினும் நாட்டின் முந்திரி நுகர்வு ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வருகிறது.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் முந்திரி ஏற்றுமதி ரூ.336 கோடியாக இருந்தது. பிப்ரவரியில் அது ரூ.306 கோடியாக குறைந்தது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி ரூ.396 கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் ரூ.295 கோடியாக சரிந்தது. மே மாதத்தில் ரூ.293 கோடியாக குறைந்தது. ஜூன் மாதத்தில் ரூ.309 கோடியாக அதிகரித்தது. ஜூலை மாதத்தில் ரூ.332 கோடியை எட்டியது. ஆகஸ்டில் ரூ.427 கோடியாக உயர்ந்தது. செப்டம்பரில் ரூ.313 கோடியாக குறைந்தது. அக்டோபரில் ரூ.331 கோடியாக அதிகரித்தது.

நவம்பர் மாதத்தில் ரூ.357 கோடிக்கு முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 34 சதவீதம் குறைவாகும். அப்போது ஏற்றுமதி ரூ.543 கோடியாக இருந்தது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் முந்திரி ஏற்றுமதி 33 சதவீதம் குறைந்து 5 கோடி டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 7.5 கோடி டாலராக இருந்தது.

தொழிற்சாலைகள்

கச்சா முந்திரியில் இருந்து பருப்பை எடுக்கவும், பதப்படுத்தவும் நம் நாட்டில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தோல் நீக்கிய பிறகு 17 லட்சம் டன் கச்சா முந்திரி 3.45 லட்சம் டன்னாக குறைந்து விடுகிறது. இதில் 1.25 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள அளவு உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒரு கிலோ முந்திரிப் பருப்பு விலை ஏறக்குறைய ரூ.1,000-ஆக இருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்