டிஜிட்டல் ஷிக்ஷா அண்டு ரோஜ்கர் விகாஸ் சன்ஸ்தான் இந்தியா எனப்படும் டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனம் (டி.எஸ்.ஆர்.வி.எஸ். ஏ.ஆர்.டி.ஒ) சார்பில் உதவி ஊரக வளர்ச்சி அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2659 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-4-2022. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை http://www.dsrvs.com/recruit/index.php? welcome/advt என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.