டாலர் மதிப்பு அடிப்படையில் அதன் ஏற்றுமதி 37 சதவீதம் உயர்ந்து 20 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 14 கோடி டாலராக இருந்தது.
நம் நாட்டில், சென்ற நிதி ஆண்டில் (2018-19), கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக 22 கோடி டன் இரும்புத்தாது உற்பத்தி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) அது 20 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது உற்பத்தி 9.5 சதவீதம் உயர்ந்துள்ளது. உருக்கு உற்பத்தியில் இரும்புத்தாது மிக முக்கியமான மூலப்பொருளாக இருக்கிறது. 2029-30-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை 30 கோடி டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.