சிறப்புக் கட்டுரைகள்

நோக்கியா ஜி 21 ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக நோக்கியா ஜி 21 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் 1.6 கிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் டி 606 பிராசஸர் உள்ளது. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக மாடல்கள் வந்துள்ளன. நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். இதில் இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்கு தளம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

5050 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.12,999. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.14,999.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்