சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவில் தயாரான ஜீப் ராங்ளர் அறிமுகம்

முழுவதும் இந்தியாவில் தயாரான ஜீப் ராங்ளர் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாகசப் பிரியர்களுக்கென வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.53.70 லட்சம் முதல் ரூ.57.90 லட்சம் வரையாகும். முதன் முதலில் ஜீப் ராங்ளர் மாடல் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிளி செய்யப் படுகிறது. இதனால் இதன் விலை ரூ.10 லட்சம் வரை குறைந்துள்ளது.

இது 2 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 268 ஹெச்.பி. திறனையும், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் டார்க் கன்வெர்டருடன் கூடிய ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.

இதில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு, பனி சூழலிலும் வெளிச்சத்தை நீண்ட தூரம் பிரகாசமாக்க உதவும் பாக் விளக்கு, 7 அங்குல கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போ டெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளத்துடன் இது வந்துள்ளது.

கதவுகளை கழற்றி மாட்டும் வசதி கொண்டிருப்ப தோடு, உறுதியான மேற்கூரையைக் கொண்டுள்ளது. முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்புக் கென ஏர்பேக் உள்ளது. டயர் காற்றழுத்த கண்காணிப்பு வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா ஆகியன இதில் உள்ளன. ஐந்து வண்ணங்களில் (வெள்ளை, கிரே, கிரானைட்ஸ் கிரிஸ்டல், கருப்பு மற்றும் சிவப்பு) கிடைக்கும். இந்த மாடலுக்குப் போட்டியாக லேண்ட் ரோவர் டிபெண்டர் இருக்கும் என தெரிகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்