சிறப்புக் கட்டுரைகள்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்க ஒரு படத்தில் ஷாருக்கான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர், ஷாருக்கான். பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இவருக்கு நிறைய ரசிகைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் கடைசியாக நடித்த சில படங்கள் சரியாக போகாதது, அவரது மகன் போதை மருந்து வழக்கில் சிக்கியது என பல பிரச்சினைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக, ஷாருக்கான் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளும் ஓரளவுக்கு தீர்ந்துள்ள நிலையில், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார், ஷாருக்கான். இவர் தற்போது, ரன்பீர் கபூர் நடிக்கும் பிரமாஸ்திரா, ஜான் ஆபிரகாம் நடிக்கும் பதான் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும், அட்லி இயக்கத்தில் வளரும் படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் இருக்கும் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்க ஒரு படத்தில் ஷாருக்கான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் முன்னா பாய் எம்.பி.பி.எஸ்., லகே ரஹோ முன்னா பாய், 3 இடியட்ஸ், பி.கே., சஞ்சு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இதில் பி.கே. திரைப்படம், பாலிவுட் சினிமா உலகில் முதன் முறையாக ரூ.800 கோடியை வசூல் செய்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ். திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரிலும், 3 இடியட்ஸ் திரைப்படம் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்ற படங்கள் ஆகும்.

இந்த நிலையில் ராஜ்குமார் ஹரானி இயக்கும் 6-வது படத்தில் ஷாருக்கான் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தில் விக்கி கவுஷன், டாப்ஸி, பொமான் ஹிரானி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு