சிறப்புக் கட்டுரைகள்

பட்டதாரிகளுக்கு வேலை

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

டெல்லி காவல் துறை (ஆண்-228), பெண் (112), பி.எஸ்.எப், சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப், ஐ.டி.பி.எப், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட மத்திய ஆயுத படைகளில் (3900) என மொத்தம் 4300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

30-8-2022 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 1-1-2022 அன்றைய தேதிப்படி 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1997-க்கு முன்போ, 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-8-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது