மாணவர் ஸ்பெஷல்

பலன் தரும் வேப்பமரம்

வேப்பம் பூவானது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடியது. இதன் இலைகள் அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

மரங்களில் எல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலமான வசந்த காலம் தொடங்கும் மாதம் சித்திரை மாதம். நாம் பார்க்கும் வேப்பம் மரங்களில் எல்லாம் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பூக்களை பார்க்கும் பொழுது கண்ணிற்கும், மனதிற்கும் எத்தனை எத்தனை மகிழ்ச்சி!! இம்மரத்தின் பயன்பாடுதான் எத்தனை அளப்பரியது!

பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பலப்பல நன்மைகளைத் தரும் இம்மரத்தை `வேம்பு' என்றும் அழைப்பர். பனை, வாழையைப் போல் இம்மரத்தின் அனைத்து உறுப்புகளும் பயன்படத்தக்கவை. நாம் குளிக்கும் நீரில் வேப்பிலையையும் சிறிதளவு சேர்த்து குளிப்பது உடலுக்கு நன்மையைத் தரும். இதன் இலைகள் அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

காந்தியின் உணவிலும், அவர் ஆசிரமத்தில் பரிமாறப்படும் உணவுடனும் வேப்பிலை நிச்சயம் இடம்பெறும். வேப்பம் பூவானது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடியது. தென்தமிழ்நாட்டினை முறை செய்து காத்த முடி மன்னர்களுள், பாண்டியர்கள் சூடிய பூ இந்த வேப்பம்பூவே!!

வேப்பம்பழத்தை பறவைகள் உண்ணும். அதை விரும்பிச் சாப்பிடும் பறவை மைனா. இதன் விதையில் இருந்து வேப்ப எண்ணெய் எடுக்கப்படுகிறது. வேப்ப மரங்கள் வீடு கட்டவும் பயன்படுகிறது. வேப்பமரக் காற்றை நாம் சுவாசிக்கும் பொழுது புத்துணர்ச்சி கிடைக்கிறது. இத்தகைய நன்மைகளைத் தரும் வேப்ப மரங்களை `வீட்டிற்கு ஒன்று' என்று வைத்து நாம் வளர்ப்போம்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்