தொழில்நுட்பம்

கார் சார்ஜர், பவர் பேங்க் அறிமுகம்

 யு அண்ட் ஐ நிறுவனம் புதிதாக கார் சார்ஜர் மற்றும் பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. கார் சார்ஜர் விரைவாக சார்ஜ் ஆகும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. இதில் இரட்டை என்ஜின் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளதால் விரைவாக ஒரே சீரான மின்சாரத்தை விநியோகிக்கும். டைப் சி மற்றும் ஏ பிரிவு மின்னணு சாதனங்களை இதில் சார்ஜ் செய்து கொள்ளலாம். மொத்த திறன் 38 வாட் ஆகும்.

பவர் பேங்க்: 20 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. இது 22.5 வாட் திறனை வெளிப்படுத்தக் கூடியது. டேப்லெட், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களையும் இதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்திறனை உணர்த்த எல்.இ.டி. விளக்கும் இதில் உள்ளது.

கார் சார்ஜரின் விலை சுமார் ரூ.1,999.

பவர் பேங்க்கின் விலை சுமார் ரூ.2,999.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்