தொழில்நுட்பம்

ராக்கிட் ரஷ் ஹெட்போன், ராக்கர்ஸ் புரோ நெக்பேண்ட்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் ராக்கிட் ரஷ் என்ற பெயரில் புதிய ரக ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்ட வயர்லெஸ் மாடலாக இது அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது 85 டெசிபல் வரையில் ஒலியை வெளிப்படுத்தும். இது செவிகளுக்கு இதமான அளவாகும்.

எடை குறைவானதாகவும், மென்மையான பகுதிகளையும் கொண்டிருப்பதால், நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் உறுத்தல் ஏற்படாது. இது சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றது. அவர்களைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் இது வந்துள்ளது. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது.

நெக்பேண்ட்

போட் நிறுவனம் ராக்கர்ஸ் 245 வி 2 புரோ என்ற பெயரிலான நெக் பேண்டை அறிமுகம் செய்துள்ளது. இது 30 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.999.

இதில் சுற்றுப் புற இரைச்சலைத் தவிர்க்கும் இ.என்.எக்ஸ். நுட்பம் உள்ளது. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது. கருப்பு, பச்சை, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்