இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.17 லட்சம். புளூடூத் இணைப்பு வசதி உள்ள மாடலின் விலை ரூ.3 ஆயிரம் அதிகமாகும். முந்தைய எப்.இஸட். மாடலை விட இது முழுவதும் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 149 சி.சி. திறன் கொண்டது. 12.4 ஹெச்.பி. திறனையும், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.
இதில் டெலஸ்கோப்பிக் போர்க், பின்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. இதன் மொத்த எடை 139 கி.கி. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 4 கிலோ கூடுதலாகும். இதன் இருக்கை உயரம் 20 மி.மீ. அதிகமாகும்.