தமிழக செய்திகள்

‘‘எம்.பி. பதவியில் இருப்பவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுப்பதா?’’ சசிகலா மறைமுக தாக்கு

‘‘எம்.பி. பதவியில் இருப்பவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுத்ததே தவறு’’, என சசிகலா பேசியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜா. சமீபத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதற்காக அ.தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது காரை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் தீ வைத்து எரித்தனர்.

இந்தநிலையில் வின்சென்ட் ராஜாவிடம், சசிகலா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அதன் விவரம் வருமாறு:-

அராஜகம்

சசிகலா:- உங்க கார் தீ வைத்து எரிக்கப்பட்ட காட்சியை டி.வி.யில் பாத்துட்டு ரொம்ப வருத்தப்பட்டேன். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.

வின்சென்ட் ராஜா:- இது ஏதாவது கூலிப்படை ஏவப்பட்ட விவகாரமா இருக்கலாமானு போலீஸ் விசாரிச்சுகிட்டு இருக்காங்க.

சசிகலா:- நிச்சயம் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுப்பாங்க...

வின்சென்ட் ராஜா:- ரொம்ப ஆடிட்டு இருக்காங்க. நீங்கதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.

சசிகலா:- எல்லாமே முடிவுக்கு வரும். கவலைப்படாதீங்க. நிச்சயம் வந்துருவேன். இதுபோன்ற அராஜகமெல்லாம் நம்ம கட்சியில நடந்ததே இல்லை.

இவ்வாறு சசிகலா பேசினார்.

ஒருவருக்கு எத்தனை பதவி?

மதுரையை சேர்ந்த பிரேம்குமார் என்ற தொண்டரிடம், சசிகலா பேசியதாவது:-

அம்மா இருந்தபோது மக்களவை, மாநிலங்களவை அப்படினு பாக்கும்போது, இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியா அ.தி.மு.க. இருந்தது. ஆனா இப்போ மாநிலங்களவைனு வரும்போது கட்சியோட அங்கீகாரத்தையே இழக்கிறோம். (மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள்) இவங்க செஞ்ச செயலால அந்த தவறு நடந்துருக்கு. ஒருத்தருக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுக்கிறோம் அப்படினா, அவங்க அதில் 6 வருடம் இருக்கலாம். ஆனால் இப்போ வேண்டியவங்களுக்கு சீட் கொடுத்து, ஒரு வருடத்துக்குள்ள சட்டமன்ற தேர்தல் வருது. அதிலும் நிக்க ஆசைப்பட்டால்... இல்லங்க நீங்க ஏற்கனவே பதவியில இருக்கீங்க... கொடுக்க முடியாதுனு சொல்லணும். ஒருத்தருக்கே எத்தனை பதவி கொடுக்குறது.

இப்போ என்ன ஆச்சு... நாமே எம்.பி. சீட்டை இன்னொரு கட்சிக்கு, எதிர்க்கட்சிக்கு தாரை வார்த்து கொடுத்த நிலையாச்சு. இதை எப்படி நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கமுடியும்?

இவ்வாறு சசிகலா பேசினார்.

இதேபோல விழுப்புரத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி, அந்தியூரை சேர்ந்த குருமூர்த்தி, ஈரோட்டை சேர்ந்த மனோகர் உள்ளிட்ட தொண்டர்களிடமும் சசிகலா பேசியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு