திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பாலமுருகன் (வயது 36). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தை சேர்ந்த பிரபு என்பவர் அறிமுகமாகி தான் கார் வாங்கி, விற்கும் தொழில் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறினார். இதை நம்பி முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை பிரபுவிடம் கொடுத்தார். பின்னர் பாலமுருகன் தனது பணத்தை திருப்பி கேட்டார். இதையடுத்து அவரிடம் பிரபு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையான ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தை கொடுக்காததால் பாலமுருகன் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.